ஏமாற்றங்களின் நெடும் பயணம்

தொடரும் ஏமாற்றங்களின்
நெடும் பயணத்தை
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்
நீ………..

விடு
குட்டக்குட்ட குனியும்
என் இயலாமையை
சொல்ல வேண்டும்

வரங்களை சாபங்களாக்கிய
தேவதை உனக்காகவா
நான் கடுந்தவம் புரிந்தேன்…?

எனக்கு நிழல் தரும்
என்றெண்ணிய உன்
வார்த்தைகள்
சுட்டெரிக்கும் சூரியனாய்
பொசுக்குகிறது
என்னையும்
மனசையும்…..

பௌர்ணமி வானில்
நீ என்ன
வேண்டுமானாலும்
செய்..
ஆனால்
அமாவாசை வானின்
நட்சத்திரங்களை மட்டும் பிடுங்கி விடாதே…………

-நிந்தவூர் ஷிப்லி தென்கிழக்கு பல்கலை இலங்கை

3 comments:

farzan abdul razeek said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் பதிவின் பக்கம் இப்போதுதான் வந்திருக்கிறேன். நான் சார்ந்த நிலத்தில் இருந்து நீங்கள் இணையத்திற்குள் வந்திருப்பது தெம்பைத்தருகிறது தோழரே. தூர்ந்து போய்க்கொண்டிருக்கும் கணதியான நம் எழுத்து/இயங்கியலை நிமிர்த்த முடியும் என்ற திடமான நம்பிக்கைகுள் நீங்களும் உட்கார்ந்துள்ளீர்கள்.

இன்றைய காலைப்பொழுதினில் முற்றாய் உங்களின் கவிதைகளின் உள்ளே செல்லமுடியாமல் போனமைக்காய் வருந்துகிறேன் சிப்லி. நிச்சயமாக நாம் உரையாடுவோம்,அந்த வாசல்கள் திறந்துள்ளதுதானே..

அன்புடன்,
பர்ஸான்.ஏஆர்
http://farzanpirathihal.blogspot.com/
http://yenathulakam.blogspot.com/

Anonymous said...

ematrankal oru pothum,
thirnthu povathillai.

afaritha anbukku,
iyalami enru oru porul....

kaadhalin vali,
unakku koodathenru thane,
naan, ennai ye arppaniththan...

sapangal mattum than,
naan vanki vantha varangal,
unnia cholli oru kutra millai.

naan than,
ellam naanthan.....

ovvoru paathai um,
tholainthu ponathum ennalthan,
kanavuhal kalavadap pattathum,
ennalthan...

Tholi, amavasai iravin,
natchatthirakkalai um,
neeya vaithukkul kol...

en theriyuma,
thevadhai ha nijamillai!!!

Anonymous said...

இந்த கவிதை வரிகளை தினம் தினம் படித்து பெருமிதமடைய நமது அப்பா AL-HAJ S AHAMED இல்லாமல் போய்விட்டார். எண்பதுகளின் இறுதியில் ஒரு தமிழ் தலைமை ஆசிரியர் என்ற வகையில் இக்கவிதை தொகுப்புகள் அவரை EVEREST உச்சிக்கு கொண்டு சென்றிருக்கும்.

Razien Ahmed
Sydney