8 பெண்களுடன் செக்ஸ்: “பகவான் என்னை தண்டித்து விட்டார்” அர்ச்சகர் பரபரப்பு வாக்குமூலம்
Posted by Shibly at 8:40 PMகாஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. தேவநாதன் அளித் துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனது பூர்வீகம் காஞ்சீபுரம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் இருந்தே எனது தந்தைக்கு துணையாக கோவிலில் வேலை பார்த்து வந்தேன். அப்போது முதல் கோவிலுக்கு வரும் பெண்களிடம் கனிவாக பேசக்கற்றுக்கொண்டேன்.
பெரும்பாலான பெண்கள் ஏதாவது வேண்டுதலோடுதான் கோவிலுக்கு வருவார்கள். எனது 15 வருட அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ள எண்ணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் ஏற்பட்டது. குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.
ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசத்தில் ஈடுபட்டேன். அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன்.
பெரும்பாலான பெண்களிடம் “அம்பாள்” போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும் 16 ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் வைத்து இன்பம் பெற வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.
சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜூக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன். 2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் போட்டோ காமிரா வசதி இருந்தது.
கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக பட மெடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன். இது போல தொடர்ந்து செய்து வந்தேன்.
எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி கோவிலில் என்னுடன் லீலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து லீலைகளில் ஈடுபட்டேன்.
இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்து வந்தேன். சில பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்தேன்.
தனது குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் ஒருவரை மயக்கினேன். குழந்தைக்கு நோய் தீர வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன். அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன்.
தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை. எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமார் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரிய வில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவ விட்டது தெரிந்தது.
நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன்.
கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அர்ச்சகர் தேவநாதன் ஏராளமான பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்டார். 8 பெண்களின் பெயரை வெளியில் சொல்லி உள்ளார். அவர்களில் சில பேரோடு லாட்ஜூகளிலும் அறை எடுத்து தங்கி உள்ளார். அவர் அடையாளம் காட்டிய பெண்களிடமும் விசாரணை நடத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். நேற்று முழுவதும் லாட்ஜூகளில் அதிரடி வேட்டை நடத்தினார். அர்ச்சகருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களை திரட்டி உள்ளனர்.
நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததால் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். போலீசார் தேவநாதனிடம் இன்னும் ஏராளமான தகவல்கள் பெற உள்ளதால் மேலும் 3 நாட்கள் காவல் நீட்டிப்பு கோரினர். ஆனால் போலீஸ் காவல் நீட்டிக்கப்படவில்லை.அதனை தொடர்ந்து தேவநாதன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Thanks to Kamesh (Anbudan)

மிக அண்மையில் பிரபலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் "ஸ்லம்டக்
மில்லியனர்"என்கிற ஆங்கிலம் கலந்த இந்த ஹிந்தி திரைப்படம் இந்திய
சினிமாவை உலகத்தரம் வாய்ந்ததாக மீண்டும் ஒரு முறை
பறைசாற்றியிருக்கிறது.ஏற்கனவே லகான், ஓம் சாந்தி ஓம், ஜோதா அக்பர் போன்ற
படங்கள் உலகெங்கும் பிரபலமாகி இந்திய சினிமாத்தரத்தை வெகுவாக
திரும்பிப்பார்க்க வைத்தன.ஆனால் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி ஒரு சில
பிரபலங்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்தப்படம் சாதித்துக்கொண்டிருக்கும்
ஏன் சாதிக்கப்போகும் மைல்கல்கள் ஏராளமோ ஏராளம்.
செலடார் பிலிம்ஸ் தயாரிப்பில் டென்னி போயெல் இயக்கிய இந்தப்படத்தில் துணை
இயக்குநராக லவ்வீன் தண்டலும், திரைக்கதையை சைமன் பபேயும்
வடிவமைத்துள்ளனர்.தயாரிப்பாளராக கிரிஸ்டியன் கொல்ஸனும், நாயகனான ஜமாலின்
இளமைப்பருவ கதாபாத்திரத்தில் தேவ் பட்டேலும், ஜமாலின் சிறுவர்பருவத்தில்
தனய் சேடாவும், துறு துறு குழந்தைப்பருவ கதாபத்திரத்தில் அயூஸ் மகேஸ்
கடேகரும் நடித்திருந்த அதேவேளை நாயகியாக பிடே பிந்தோவும், கௌரவ வேடத்தில்
அனீல் கபூரும், போலீஸ் துப்பறிவாளனாக இர்பானும் பாத்திரமறிந்து
நடித்ததோடு முகம் காட்டாமல் அனைத்து ரசிகர்களையும் இசையால்
கட்டிப்போட்டிருப்பவர் நம் இசைப்புயல் ஏ.ஆர.ரஹ்மான்.
இனி கதையின் விளிம்பிற்கு வருவோம்.படம் ஆரம்பிக்கும்போது பார்வையாளர்களை
நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அது இதுதான் "ஜமால் 20 மில்லியனை
எவ்வாறு வெற்றி கொண்டான் ? முதல் விடைத்தெரிவு "அவன் ஒரு
ஏமாற்றுக்காரன்", இரண்டாவது விடைத்தெரிவு "அவன் அதிர்ஸ்டசாலி", மூன்றாவது
விடைத்தெரிவு "அவன் பெரும் அறிவாளி", நான்காவது விடைத்தெரிவு "அது
எழுதப்பட்ட விதி".அதற்கு விடைதான் முழுப்படத்தின் கதையுமே.
ஒரு தெருவோரப்பிச்சைக்காரனான ஜமால் 20 மில்லியனை ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் வென்று விடுகிறான்.அவன் ஏமாற்று வித்தைக்காரனாக இருக்கலாம்
என்று போலீஸ் சந்தேகித்து அவனை கைது செய்து மிகக்கொடுமையாக
விசாரிக்கிறது.பெரும் பெரும் அறிவாளிகளால் வெல்ல முடியாத பரிசை ஒரு
சாதாரண மனிதன் நீ எப்படி வெற்றி பெற்றாய் என்று அதட்டும் போலீசுக்கு
எனக்கு விடைகள தெரிந்திருந்ததால் நான் வென்றேன்" என்று சொன்னதுமே
தியேட்டர் நிமிர்ந்து உட்கார்கிறது.அவனிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு
கேள்விக்கும் அவன் எதை அடிப்படையாக வைத்து விடை சொன்னான் என்கிற பாணியில்
விரிகிறது கதை.
உண்மையில் ஜமாலாக நடித்த துறு துறு பையனும் சரி, சிறுவனும் சரி, இளைஞனும்
சரி இயல்பான நடிப்பில் நம்மை கட்டிப்போடுகிறார்கள்.படம் முழுவதும்
யதார்த்தம் நிரம்பி வழிகிறது.ஆரம்பத்தில் காட்டப்படும் கிராமம் அழுக்கு
நிறைந்த சேரிப்பகுதிகளின் உண்மை முகங்களை நமக்கு வெட்ட
வெளிச்சமாகக்காட்டுகிறது.அதேபோல கதையின் வழியே இணைந்து ஓடும்
கதாபாத்திரங்களும் யதார்த்தமாகவவே
வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு போலீஸ்காரர்களையும் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் இடையிடையே வரும் வன்முறைகளையும் கோடிட்டுச்சொல்ல முடியும்.
மில்லியன் பரிசப்போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜமாலின் வhழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவங்களும் விடையாக கோர்க்கப்பட்டிருக்கும் பாணி அற்புதமானது.விடையளிக்கும்போது தனது முகபாவங்களாலேயே நம்மையெல்லாம் நாயகன் வென்று விடுகிறான்.மேலும் பம்பாயில் குழந்தை கடத்தல்கள் விபச்சாரம் கேங்ஜஸ்டர்களின் ஆதிக்கம் போன்றனவும் ஆபாசமோ வன்முறையோ தலை தூக்காவண்ணம் மிக நுணுக்கமாக கையாளப்பட்டிருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு சபாஷ்.
ஜமாலும் அவனது சகோதரனும் ரயிலில் செய்யும் திருட்டுக்களும் தாஜ்மகாலுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் அவர்கள் தாஜ்மகாலைப்பற்றி விளக்கும் காட்சிகளும் அமிதாப்பச்சனைக்காண ஜமால் மலசல கூடத்துக்குள் குதித்து எழும்புவதும் அழகான நகைச்சுவைகள்.அதேபோல நாயகி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும்போதும் ஜமாலின் கண்ணெதிரே அவனது சகோதரன் அவளை கற்பழிப்பதும் கண்ணீர்க்காட்சிகள்.தனது காதலியே ஜமாலை உடலுறவுக்கு அழைத்தும் அவன் மறுப்பதும் அவள் விபச்சாரியாக இருந்து திருந்தியவள் என்று தெரிந்தும் தொடர்ந்து அவன் அவளை தேடுவதும் உணர்ச்சிப்பிரவாகம்.
படத்தில் மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.யதார்த்தமாமான கதைக்கு உயிரோட்டமாக இசையமைத்துள்ளார்.கிராமியம் கலந்த சிறுவர்களுக்கு ஒரு விதமாமாகவும் சோகக்காட்சிகளுக்கு இன்னொரு விதமாகவும் மில்லியனர் நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வெவ்வேறு விதமாகவும் "மல்டி மியூசிக்கல் சோ" வையே ரஹ்மான் நிகழ்த்திக்காட்டுகிறார்.வெல்
கடைசியாக எவ்வாறு போலீஸ் ஜமாலையை நம்பி விடுதலை செய்கிறது என்பதும் ஜமாலின் காதலுக்கு என்ன நடக்கிறது எனபதும் படத்ததைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஜமால் 20 மில்லியனை எப்படி வென்றான் என்ற கேள்விக்கான விடையும் காட்டப்படுகிறது.
மொத்தத்தில் மிக அழகான ஒரு படத்தை பார்த்த திருப்தியை இந்தப்படம் தருகிறது.இரண்டே மணித்தியாலங்களுடன் முடிகின்ற இந்தப்படம் இரண்டு மூன்று நாட்கள் நமக்குள் அதிர்வை ஊற்படுத்துவதே படத்தின் மிகப்பெரிய வெற்றி.இந்திய சினிமாவில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்திருக்கிறது "ஸ்லம்டக் மில்லியனர்".இருள் சூழ்ந்ததொரு அடர்ந்த வனாந்தரத்தின்
அசையும் ஒரு இலையென
எவர் கண்ணிலும் எட்டுவதாயில்லை
என் கண்ணிலிருந்து உகுக்கும்
பலப்பல கண்ணீர்த்துளிகளும் கனவின் கலைதலும்...
தனிமைத்தீயில் யதேச்சையாய் சிக்குண்ட
என் விதிக்கப்பட்ட கணங்களிலிருந்து
சிக்கிச்சின்னாபின்னமாகி சாம்பலாகிப்போனது
சில நினைவுகளும் அது சார்ந்த நிதர்சனங்களும்...
மழைநாள் மண்வாசமாய்
உயிரின் வேர்ப்பரப்பிலிருந்து
நினைவுகள் நனைக்கும் ஞாபக எச்சங்களின்
எழில் கோலங்கள் மொத்தமும்
முற்றுப் "புள்ளி" என்றாகிப்போன பின்
எதற்கிந்த வேசம்...?எதற்கிந்த சுவாசம்...??
உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஒரு ஏகாந்த இசையென
காற்றின் சுவடுகள் பற்றி
எங்கெல்லாமோ மிதந்து கொண்டிருக்கிறேன்...
நீளும் திசை வழியே
என் பாதையற்ற பயணம்
கானல் முகங்களில் மோதுண்டு
செய்வறியா பேரதிர்ச்சியுடன்
காகிதக்கப்பலாய் தத்தளிக்கிறது..
சுய கழிவிரக்கம் குறித்தான என்
நிசப்தப்புலம்பல்கள்
ஒரு வசந்தத்தின் பாடலுக்காய்
அழுதபடி தவமிருக்கிறது..
நிர்மூலமான நிகழ்காலத்தின்
மிக மெல்லிய இடுக்குகளில் கசியும்
நம்பிக்கைச்சூரியனும்
மெல்ல மெல்ல ஒளியிழக்கிறது
காலத்தின் கைகள் சுமந்திருக்கும்
இறுகிப்போன விலங்குகளை பார்த்த பின்பு.....
May Almighty's peace be upon you,
I was invited by Rupavahini Television for a live interview on 21st of June 2008.
It Can be watched via following links.
1. http://www.youtube.com/watch?v=yovuJtOW2nE
2. http://www.youtube.com/watch?v=llKQ5PJUfR8
3. http://www.youtube.com/watch?v=Q_l9dabJugA
4. http://www.youtube.com/watch?v=TZsm2A1mKrY
5. http://www.youtube.com/watch?v=ws7J_nAbZeU
6. http://www.youtube.com/watch?v=g4eu6a44J7s
7. http://www.youtube.com/watch?v=8QIeYzjXiwg
8. http://www.youtube.com/watch?v=OSaEpBkcgRQ
9. http://www.youtube.com/watch?v=1VLsFJRLI14
10. http://www.youtube.com/watch?v=9ZWMJzLIT50
or simply go to
http://www.youtube.com/profile_videos?user=amjadfha
to get all ten links in one single page....
Thank you.
Regards from,
Shibly.


















