இன்னொரு பிரிவை நோக்கி
கடைசியில்
நிகழ்ந்தே விட்டது
உன்னோடான
பிரிவும்.......
எதிர்பார்த்ததுதான்
இருந்தும்
இத்தனை
சீக்கிரமா?
நீ
அடிக்கடி சொல்லும்
‘பிறகு சொல்கிறேன்’
என்பதை
சொல்லாமலே
போய்விட்டாய்
திருவிழாவில்
குழந்தையைத் தொலைத்த
தாயொருத்தியின்
பதை பதைப்பும்
அழுகையும்
எனக்கு இன்னும்
சில காலம்தான்......
பிறகு
இன்னொரு
பிரிவை நோக்கிய
உறவின் மீதான பயணம்
இயல்பாகவே நிகழ்ந்துவிடும்
!- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com
7 comments:
/நீ
அடிக்கடி சொல்லும்
‘பிறகு சொல்கிறேன்’
என்பதை
சொல்லாமலே
போய்விட்டாய்/
இந்த வரிகள் மட்டுமே சின்னக் கவிதை மாதிரி இருக்கு. வாழ்த்துகள்.
அருமையாய் இருக்கிறது.
என் வாழ்த்துக்கள்!!
Hayah Roohi
thanks for your comments...keep in touch
shibly
அடேங்கப்பா, கவிதை பின்னியெடுக்கிறதே.... இவ்வளவு சின்ன வயசிலேயே இவ்வளவு ஞானமா? உன் கவிதைத் தொகுப்புகளின் பெயரென்ன? அட்சர பாத்திரம் என்கிற என் வலைப்பதிவை எப்படிப் பார்த்தாய் தம்பீ?
shibly..nee vittathai nan thodargiren..even my " ellam sila kalam" is on these lines..........
palayan kalithalum,
puthiyana puhuthalum..
ithu thanae, valkai nijam..
Pirivuhal oru pothum,
mutrup pulli alla,
ovvoru pirivum,
innumoru uravukkana,
patihal thanae....
anaalum,
manap pottahaththirkkul,
kodi kodi uravin thadangal....
ovvoru uravum,
naam,
valnthatharkkana oru,
adayalam thanae..
Machan.... u made me to think so deeply!! I love ur poems.... but..
valkai in,
nerukkadikkul,
nala pakkamum,
manathai aluththum,
sumaihalukkul,
piruvum,
uravum,
thinasari natappuhalahi ponathu..
manam,
aluvathai kooda maranthu ponathu....,
nilalhal mattumae,
eppothum kooda irukkum,
amavasai naatkal ithu!!!
wanted to write more, but I DONT want to!! (naan yaar theriyum thanae?)
anyways, all the very best!!
இந்த கவிதை வரிகளை தினம் தினம் படித்து பெருமிதமடைய நமது அப்பா AL-HAJ S AHAMED இல்லாமல் போய்விட்டார். எண்பதுகளின் இறுதியில் ஒரு தமிழ் தலைமை ஆசிரியர் என்ற வகையில் இக்கவிதை தொகுப்புகள் அவரை EVEREST உச்சிக்கு கொண்டு சென்றிருக்கும்.
Razien Ahmed
Sydney
Post a Comment