வாழ்வின் துயர் நிறை தருணங்கள்


வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது.....

சிறகொடிந்த அப்பறவைக்கு

அடுத்த திசைநோக்கிப்பறக்கும் வீரியம்

துளியேனும் கிடையாது..

விரிந்திருக்கும் வான்பரப்பில்

அதற்கான கனவுகளை மட்டும்

சிறகடிக்க விட்டு விட்டு

தனித்தலையும் ரண மழையில்

கொட்டக்கொட்ட நனைந்து கொண்டிருக்கிறது...

வலி மிகைத்த கவிதையொன்றின்

கண்ணீர் அறைகூவலை

எப்போதும் அதன் சோகம் கவிந்த

கண்களில் நீங்கள் காணக்கூடும்...

மீளமுடியாத

கனவுகளற்ற அதன் வாழ்வியல் கோலங்கள்

தவறாக வாழப்பட்ட

அல்லது

வாழ்தலில் நேர்ந்த தவறாக

ஏதோ ஒரு பிரளயத்தைசாற்றி நிற்கிறது..

வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது

எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது


ஷிப்லி

6 comments:

Anonymous said...

dEAR bROTHER,
db,
I KNOW YOU WILL COME UP GRADUALLY.

COMMENTS:

SORROWS AND WORRIES PREVAILS LAST TAHN CHEERS AND HAPPENESS.

WRITE MORE SAME LIKE THIS.
ALL LOVES PAIN AND VAIN.

GAZZALI AM

Shibly said...

DB,

Thanks for your valuable comments..
Keep in touch,,

மாதவராஜ் said...

ஷில்பி!

வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்.
கவிதைக்கான மொழிநடை இருக்கிறது.
இன்னும் அடர்த்தியாய், கவிதைகள் உங்களால் தரமுடியும் எனத் தோன்றுகிறது.
நிறைய எழுதுங்கள்.

Anonymous said...

Nice poem...Hope more from you....

Tech Shankar said...

உங்களுக்கு மைக்ரோசாப்ட் பரீட்சைகளுக்கான கே.ப. வேண்டுமா?

tamilnenjam@gmail.com - என்னுடன் மின்னஞ்சல் அரட்டைக்கு வரவும்.

Anonymous said...

Nice skin...